Saturday, March 23, 2013

இனி மெல்லச் சாகும்


தமிழ் நாட்டில் இருக்கும் மாணவர்களை  பார்கேக கவலை தான் வருகிறது ...ஈழ பிரச்சனைக்கு போரடிறது ஒரு புறம் இருக்க ....அவர்கள் தங்களுக்கு என்ற ஒரு அடையாளத்தையே இழந்து நிற்பதுதான் உண்மை... நாங்கள் யார் தமிழன் யார் என்ற அடையாளத்தை இழந்து நிற்கிறான் உலகெங்கும் இருக்கும் தமிழர்கள்..

மீனவர் பிரச்னை தொடங்கி கூடங்குளம் வரை தமிழர்கள் ஒடுக படும் போது 80% தமிழ்நாட்டில் இருபவர்கள் திரும்பி கூட பார்க்க வில்லை.
மாறாக அதற்கு எதிர்த்து குரல் கொடுத்த உதயகுமாரன், ஒரு வெளி நாடு கை கூலி என்று அவிழ்த்து விட்டது காங்கிரசும் திமுகவும் ..இவர்கள் சொல்வதே சரி என்று மக்களும் நினைக்கும் வண்ணம் sun tv - kalainyar tv பிரச்சாரம் நடத்தி வெற்றி பெற்றன..

இதே பிரச்சனை தான் மீனவர் பிரச்சனையிலும். இந்த உப்பு சப்பு இல்லாத தீர்மானத்தை நிறை வேற்றும போது காங்கிரசோடு திமுக இருந்தால் தமிழக மக்களிடம்  ஆப்பு நிசம் என்று பிரிந்த மாறி நடிக்கிறார் கருணாநிதி..மீண்டும் இவர் தேர்தலில் வெற்றி பெற்றால் காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் .

தங்களுடைய போராட்டம் அகிம்சை வழியில் நடத்த பட்டது பற்றி பெருமிதம் கொள்ளும் மாணவர்கள் அவர்களுடைய போராட்டத்தை மத்திய அரசு ஒரு துளியும் கணக்கு எடுக்க வில்லை என்பது தான் உண்மை...

இந்த விரக்தியில் தான் பலர் தீக்குளித்து சாகிறார்கள். மன விரக்தி என்றே கூற வேண்டும்...இதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் மேலே தமிழன் என்றால் இப்படிதான் என்று மற்ற இனத்தவர்கள் போடு வைத்து இருக்கும்  போலி Definition தான் ..வந்தாரை வாழ வைப்பான் தமிழன்..

ஆனால் இப அவனாலேயே வாழ முடியாம இருக்கிறப்போ..தமிழா நீ விழித்தெழு என்று குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் மீது இன்னொரு தமிழனே புகார் கூறி அவனை நோகடிப்பது மட்டுமன்றி அவன் ஒரு தீவிரவாதி என்றும் அடையாள படுத்தப்படும் நிலைதான் நிலவுகிறது.. உதாரணம் உதயகுமாரன் ....

பாதிக்க பட்டவனுக்கு தான் அந்த வலி தெரியும் அதை ஒருத்தரும் மதிகிறதே இல்லை.. மாறாக தம்மை சமூகத்தில் நலவராக காட்டி கொள்ள எடுக்கும் போலி நாடகங்கள் இன்னும் கடுப்பை தன கிளப்புது...

இதற்கு முக்கிய காரணம் சமூகத்தில் இருக்கும் 90% மக்கள் சிந்திப்பதே
 இல்லை தனது அப்பன் தாதன் மூதாதையர் என்ன சொன்னன்களோ அதுவே சரி என்று நினைத்து வாழ்கின்றான்.

படிக்கணும் காசு உழைக்கணும் கல்யாணம் பண்ணும் தனுடைய பிள்ளய மத்தவங்க பிள்ளைய விட திறமை சாலினு சாமூகதில பெயர் எடுக்கணும் யார்ட இந்த மானம் கெட்ட சமூகம் ????

நிறைய பேர் நினைப்பு Degree, Cima, Cim, Acca, Cfa, MBA படிச்சு முடிசுடம் நாங்க பெரிய அறிவாளிகள் தான் சமூகத்தில் இனி சோறு கிடைக்கும் நமது பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்...இன்னொரு மனிதன் கொடூரமாக கொல்லப்படும் போது ஒரு இரங்கல் கூட படாத நீ மனித இனத்திற்கே ஒரு அவமானம்....இப்படி நான் சொன்ன நான் பைத்தியக்காரன்...

பச்சோந்தி கூட சூழலுக்கு ஏற்ப தனை மாற்றுது அனா மனிதன் தன்னை மாற்றி கொள்ள தயார் இல்லை..இதற்கு அரசியல் கட்சி மீதும் நடிகர் மீதும் அல்லது நித்தியானந்தா போன்ற போலி சாமியார்கள் மீதும் பழி போடுவது ஏற்புடையது அல்ல..உங்களுடைய அறிவு எங்கே நிற்கிறது என்று நீங்களே உங்களை கேள்வி  கேட்டு  கொள்ளுங்கள் ...

மிகவும் மன விரக்தியை தரும் விடயம் மனிதன் தன அடையாளத்தை இழந்து நிற்பது தான்..அன்பு தான் கடவுள் இது ஒருத்தருக்கும் புரியாது..மதத்தினாலும் சாதியாலும் பிரிந்து இருக்கும் இந்த மனித குலம் ஒரு பாரிய அழிவை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறது..என்று மனிதன் மதங்களை நிற வேற்றுமைகளை துறந்து  வெளியே வருகிறானோ அன்று தான் மனித குலம் விடியும்..இது தவிர ஒவோருதணும் தனது அறிவை அதாவது புத்தக பூச்சிகளாக இருக்காமல் பகுத்தறிவை வளர்ப்பது தான் அவசியம்.

இந்த பதிவை படிக்க போறது 10 பேர் சிந்திக்க போவது ஒருத்தனும் இல்லை..ஏன் ஏன்டா இப விஜய் டிவி ல அது இது எது தொடங்க போகுது பொய் பார்க்கணும் இவன் சும்ம மொக்க போட்டு இருக்கான்...வெங்காயம் :(.Friday, August 3, 2012

நீ பொன்னயனா ?????????????????

எங்க அம்மா எனக்கு  பால் ஊட்டி வளர்த்தத விட, உங்க அப்பா இவளவு சீதனம் வாங்கி தான் என்ன கலியாணம் பண்ணினவர் எண்டு சொலி வளர்த்தது தான் கூட. இதில அப்பாவோட சண்ட முத்தினா என்ன தனியா கூபிட்டு சொல்லுவா கலியாணம் பண்ணின பிறகு கார் வேணும் எண்டு ஒத்த கலில நிண்டு கார வான்கிடார்னு.இது எல்லாம் சொலேக்க எங்க அப்பா மேல எனக்கு கடுப்பு ஆகும்.


இது எங்க வீட்ல நடக்கிற விஷயம் இல்ல எல்லா வீட்லயும்  நடக்கிற விஷயம் தான்.


இத பத்தி ஏன் எழுதிறன் ஏன்டா,,,, நீண்ட நாள் என் மனதில இருந்த கேள்வி மாட்டு வண்டி போய் காரும் வந்திடு, ஆனா இந்த சீதனம் ஏன் இன்னும் ஒளியல ?????????????????கால ஓட்டத்தில் நாங்களும் சுழல எங்க அண்ணனுக்கு காலியான பேச்சு வந்திச்சு அப்பா எங்க அம்மா பொண்ணு வீடு எங்க பிள்ளைக்கு வீடு குடுத்த நல்லம் எண்டு சொன்ன செம கடுபாகிட்டன்.. நல்ல வேல எங்க அண்ணா குடுத்த பேச்சில அப்பனும் ஆத்தாளும் மூடிட்டு இருக்கினம் 

சீதனம் இன்னும் ஒளியாம இருக்கிறதுக்கு முக்கிய காரணம் இதுதான்

பொண்ணு வீட்டார் தங்கட லூசு பொண்ணுக்கு டாக்டர் மாப்ளை தான் வேணும் எண்டு இருக்கிறது...எனக்கு விளங்கேல Doctorukku படிகிரவங்களுக்கு   பெருசா எண்டு???

சில நல்ல மாபிளைமார் சீதனம் வேண்ட விட்டாலும் உடன பொன்னு வீட்டார் ஏலம் விட தொடன்கிடுவினம் .....தம்பி ஒரு கோடி........ மாடி  வீடு...... கார் .......எண்டு அசை காட்டி விளுதுடிவிணம்... 

ஆசை யார தான் விடு வச்சது.. கூட்டி குடுகிறவன்கள்  ....... காட்டி குடுகிறவன்கள்....................::: பரம்பறேல இருந்து வந்தவனுகள்  தானே நாங்கள்.

இரண்டாவது காரணம் மாபிளைகளே  வந்து சீதனம் வாங்கடியும் அவன்   பொன்னயனாம் ...  எண்டு கத கட்டி விட கிழடு கட்டைகளும் அவேட கொச்சிங்க்ள வளர்ந்த விழுதுகளும்  இருக்குதுகள்

நான் பழி  போடுவது பொண்ணு வீட்டார் மீதுதான் எவனாவது சீதனம் கேட்ட கலியாணம் பண்ணாதீங்க..சும்மா புலம்பிரத விட்டு மாற்றத்தை உருவாக்குங்கள். உங்களை மாதிரி சில பேரால  தான் நிறைய ஏழை குடும்பம் பாதிக்க படுகுது சீதனம் குடுத்து மாப்பிள்ளை மடக்கி பிடிக்கும் பொண்களுக்கும் சொல்லுறன் உங்களை விரும்பி அவன் உங்களை மணக்க விரும்பல...அப்படி வார ஒருத்தன் நாளைக்கு எவளாவது பெருசா காட்டின போடுவானுகள்

பொண்ணுங்க நல்ல மாப்பிள்ளை வேணும் எண்டு வாயல வெட்டி விளுதுகினமே தவிர. கலியாணம் எண்டு வரேக்க தாங்க நல்லா செட்டில் ஆகிற வழிய தான் பாக்கினம்  True fact.

நான் சொல்லுறன் சீதனம் வாங்கிறன் பொன்னையன் எண்டு இது எங்க அப்பனுக்கும் பொருந்தும்....

மாற்று சிந்தனை தேவை :( தோழர்களே ....

Saturday, October 1, 2011

மேர்வின் சில்வாவும் கடவுளின் சாபமும் ஒரு கூத்தாடியின் பார்வை

 இந்த பதிவ எழுதுறதுக்கு முக்கிய காரணம் மேர்வின் சில்வாதான் ...என்னதான் மனுசனுக்கு சமூகத்தில கெட்ட பெயர் இருந்தாலும் அந்த மனுஷன் மேல எனக்கு நல்ல மரியாதை வந்தது எப்ப எண்டா நரபலிய தடுத்த போதுதான் .....

அதுக்கு பிறகு அவர் அந்த கோழியையோ /ஆட்டையோ என்ன செய்தார் எண்டு அவரிட்ட போய் கேளுங்கோ சரியா...????

ஓகே.. இந்த பதிப்பு மூலம் நான் என்ன கூத்தாட வந்து இருக்கிறன் எண்டா

கடவுள் எனற பெயரில மனுசங்க அடிக்கிற கூத்துக்கள் பற்றி தானுங்கோ..


நாம எப்ப கடவுள நினைகிறம்????கடவுளுக்கு காய்ச்சல் வரும்போது ??????ம்ம்ம்  ஒருவேளை கடவுளுக்கு காசு இல்லாத போது????ம்ம்ம் அதெல்லாம் இல்ல 

எனக்கு எப்ப ஒரு தேவை வருகுதோ... அப்ப தான் கடவுள் நினைவுக்கு வருகிறார்

உதாரணமாக

நான் எக்ஸாம் பாஸ் பண்ணனும்......எண்ட எதிரி நாசமா போகணும் ..இல்லாட்டி அந்த பிகரு செட் ஆகணும்...... என்ற ஒரு தேவை நமக்கு வரேகுள்லையே ...????

சாமி எண்ட முருகா,, பிள்ளையாரப்பா ,,, எம் பெருமான் என்ன கை விட மாட்டார் என்று தேங்கையில இருந்து மனுஷன் வரைக்கும் கொலை பண்ணி கடவுளுக்கு காணிக்கை போடுறம்

அப்ப யார் இந்த கடவுள் எண்டு  நாம் எமக்குள் கேள்வி கணைகளை தொடுத்தோம் ஆனால் அதற்கு பதில் கிடைக்கும் ??????

இதை விட்டுட்டு

 பிழைய எல்லாம் எங்களோட வச்சு கொண்டு கடவுளிட்ட பொய் அழுதா அவர் என்னடா பண்ணுவார் ......பாவம்டா அந்த கடவுள் உங்களால அவருக்கு கெட்டபெயர்........

அன்பு தான் சிவம் என்பது எனது கொள்கை ....அதற்காக எல்லா சந்தர்ப்பத்திலையும் அன்பு மழைகளை பொழிய முடியாது அப்படி பொழிய நான் புத்தனும் அல்லன் ...எல்லா ஆசைகளும் உள்ள  ஒரு சாதாரண மனிதன்..

யோசிக்கணும் அண்ணே......Tuesday, September 6, 2011

விலை மாதுக்கள் VS கடவுளின் புதல்வர்கள் ஒரு தொலை நோக்குப் பார்வை

விபச்சாரம் உலகத்தின் மிக தொன்மையான தொழிலாக இருந்த போதும் அதற்கான கேள்வியும் நிரம்பலும் எப்பொழுதும் குறைந்த பாடில்லை.

அது ஒருபுறம் இருக்க அத்தொழிலை செய்யும் பெண்கள் மீதான சமூகத்தின் ஏளனப் போக்கு இன்னும் குறைந்த பாடில்லை.

இதற்க்கு முக்கிய காரணம் சமூகத்தின் பிற்போக்கான சிந்தனையே ஆகும்
இக்கருத்தை நாம் பரந்த மனப் போக்குடன் பார்த்தல் அதற்கான பதில் கிடைக்கும்.

ஆதரவற்ற பெண் குழந்தைகள்,  காதலனால் ஏமாற்றப்பட்ட   பெண்கள்,
விதவைகள் மற்றும் பலரும், 
சமுகத்தால்  தாங்கள் ஒதுக்கப் படும் போது அடுத்த வேளை செலவுக்ககாக இத் தொழிலுக்குள் நுழைகின்றனர்
இதை விரிவு படுத்தி கூறுவோமேயானால், இவர்களது சூழ்நிலையை பயன்படுத்தி, பிற ஆண்களும் பெண்களும் அவர்களை இத் தொழிலில்  தள்ளி தாமும் ஒரு ஆதாயம் தேடி கொள்கின்றனர்.

மறு புறத்தில்  தமது காம இச்சையை பூர்த்தி செய்ய, பல ஆண்களை தமது காதல் வலைக்குள் விழுத்தி காமவேட்டை ஆடும் காமினிகளை நம்முள் பலரும்  கண்டு  கொள்வதில்லை.  

ஆகவே கிழிக்கப் பட வேண்டியது விலை மாதுக்கள் மனதல்ல,,,,,,,,,,
காமினிகள் தம் மீது போர்த்தி இருக்கும் அப்பாவித்தனமான முகச் சீலைகளே.........

பின்னூட்டல் 

இந்த தப்பான கருத்து மாற்ற படவேண்டும் என்று என் சக நண்பனுடன் உரையாடும் பொழுது அவர் கூறுகின்றார் இதெல்லாம் சமய விதி முறைகளுக்கு முரணானது எனவே அவர்கள் ஓரம் கட்ட பட வேண்டியவர்களே ????

நான் எனக்குள்  சொல்லிக் கொண்டேன்,  சாதி அடிப்டையில் மனிதர்களை ஒதுக்குதல்<<<சில சமயங்களில் அவர்களை நாம் கோவிலுக்குள் கூட அனுமதிப்பதில்லை>>>இது எல்லாம் கடவுளால் மனிதர்களுக்கு கூறப்பட்டவையா என்ன???

ஒன்று மட்டும் உறுதி மனித இனம் இருக்கும் வரையில், இவ் உலகில் ஒதுக்கப் பட்டவர்களுக்கு  நடக்கும் அநீதிகள் அழியப் போவதில்லை, ஒரு சிலர் இதை எதிர்த்து நின்றாலும் அவர்கள் இச் சமூகத்தால் துரோகிகளாக அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டுவிடிகின்றனர்.

அதன் பின்னர் சொல்லுவர் இம் மூடர் கடவுளை எதிர்த்தான்,, அதனால் அவன்      கடவுளாலேயே அழிக்கப்பட்டான் .இது  எல்லாம் மனிதன் தான் செய்த பிழையை மறைக்க, உருவாக்கி  வைத்திருக்கும் ஒரு மூட நம்பிக்கை தான் சாமி