Saturday, October 1, 2011

மேர்வின் சில்வாவும் கடவுளின் சாபமும் ஒரு கூத்தாடியின் பார்வை

 இந்த பதிவ எழுதுறதுக்கு முக்கிய காரணம் மேர்வின் சில்வாதான் ...என்னதான் மனுசனுக்கு சமூகத்தில கெட்ட பெயர் இருந்தாலும் அந்த மனுஷன் மேல எனக்கு நல்ல மரியாதை வந்தது எப்ப எண்டா நரபலிய தடுத்த போதுதான் .....

அதுக்கு பிறகு அவர் அந்த கோழியையோ /ஆட்டையோ என்ன செய்தார் எண்டு அவரிட்ட போய் கேளுங்கோ சரியா...????

ஓகே.. இந்த பதிப்பு மூலம் நான் என்ன கூத்தாட வந்து இருக்கிறன் எண்டா

கடவுள் எனற பெயரில மனுசங்க அடிக்கிற கூத்துக்கள் பற்றி தானுங்கோ..


நாம எப்ப கடவுள நினைகிறம்????கடவுளுக்கு காய்ச்சல் வரும்போது ??????ம்ம்ம்  ஒருவேளை கடவுளுக்கு காசு இல்லாத போது????ம்ம்ம் அதெல்லாம் இல்ல 

எனக்கு எப்ப ஒரு தேவை வருகுதோ... அப்ப தான் கடவுள் நினைவுக்கு வருகிறார்

உதாரணமாக

நான் எக்ஸாம் பாஸ் பண்ணனும்......எண்ட எதிரி நாசமா போகணும் ..இல்லாட்டி அந்த பிகரு செட் ஆகணும்...... என்ற ஒரு தேவை நமக்கு வரேகுள்லையே ...????

சாமி எண்ட முருகா,, பிள்ளையாரப்பா ,,, எம் பெருமான் என்ன கை விட மாட்டார் என்று தேங்கையில இருந்து மனுஷன் வரைக்கும் கொலை பண்ணி கடவுளுக்கு காணிக்கை போடுறம்

அப்ப யார் இந்த கடவுள் எண்டு  நாம் எமக்குள் கேள்வி கணைகளை தொடுத்தோம் ஆனால் அதற்கு பதில் கிடைக்கும் ??????

இதை விட்டுட்டு

 பிழைய எல்லாம் எங்களோட வச்சு கொண்டு கடவுளிட்ட பொய் அழுதா அவர் என்னடா பண்ணுவார் ......பாவம்டா அந்த கடவுள் உங்களால அவருக்கு கெட்டபெயர்........

அன்பு தான் சிவம் என்பது எனது கொள்கை ....அதற்காக எல்லா சந்தர்ப்பத்திலையும் அன்பு மழைகளை பொழிய முடியாது அப்படி பொழிய நான் புத்தனும் அல்லன் ...எல்லா ஆசைகளும் உள்ள  ஒரு சாதாரண மனிதன்..

யோசிக்கணும் அண்ணே......Tuesday, September 6, 2011

விலை மாதுக்கள் VS கடவுளின் புதல்வர்கள் ஒரு தொலை நோக்குப் பார்வை

விபச்சாரம் உலகத்தின் மிக தொன்மையான தொழிலாக இருந்த போதும் அதற்கான கேள்வியும் நிரம்பலும் எப்பொழுதும் குறைந்த பாடில்லை.

அது ஒருபுறம் இருக்க அத்தொழிலை செய்யும் பெண்கள் மீதான சமூகத்தின் ஏளனப் போக்கு இன்னும் குறைந்த பாடில்லை.

இதற்க்கு முக்கிய காரணம் சமூகத்தின் பிற்போக்கான சிந்தனையே ஆகும்
இக்கருத்தை நாம் பரந்த மனப் போக்குடன் பார்த்தல் அதற்கான பதில் கிடைக்கும்.

ஆதரவற்ற பெண் குழந்தைகள்,  காதலனால் ஏமாற்றப்பட்ட   பெண்கள்,
விதவைகள் மற்றும் பலரும், 
சமுகத்தால்  தாங்கள் ஒதுக்கப் படும் போது அடுத்த வேளை செலவுக்ககாக இத் தொழிலுக்குள் நுழைகின்றனர்
இதை விரிவு படுத்தி கூறுவோமேயானால், இவர்களது சூழ்நிலையை பயன்படுத்தி, பிற ஆண்களும் பெண்களும் அவர்களை இத் தொழிலில்  தள்ளி தாமும் ஒரு ஆதாயம் தேடி கொள்கின்றனர்.

மறு புறத்தில்  தமது காம இச்சையை பூர்த்தி செய்ய, பல ஆண்களை தமது காதல் வலைக்குள் விழுத்தி காமவேட்டை ஆடும் காமினிகளை நம்முள் பலரும்  கண்டு  கொள்வதில்லை.  

ஆகவே கிழிக்கப் பட வேண்டியது விலை மாதுக்கள் மனதல்ல,,,,,,,,,,
காமினிகள் தம் மீது போர்த்தி இருக்கும் அப்பாவித்தனமான முகச் சீலைகளே.........

பின்னூட்டல் 

இந்த தப்பான கருத்து மாற்ற படவேண்டும் என்று என் சக நண்பனுடன் உரையாடும் பொழுது அவர் கூறுகின்றார் இதெல்லாம் சமய விதி முறைகளுக்கு முரணானது எனவே அவர்கள் ஓரம் கட்ட பட வேண்டியவர்களே ????

நான் எனக்குள்  சொல்லிக் கொண்டேன்,  சாதி அடிப்டையில் மனிதர்களை ஒதுக்குதல்<<<சில சமயங்களில் அவர்களை நாம் கோவிலுக்குள் கூட அனுமதிப்பதில்லை>>>இது எல்லாம் கடவுளால் மனிதர்களுக்கு கூறப்பட்டவையா என்ன???

ஒன்று மட்டும் உறுதி மனித இனம் இருக்கும் வரையில், இவ் உலகில் ஒதுக்கப் பட்டவர்களுக்கு  நடக்கும் அநீதிகள் அழியப் போவதில்லை, ஒரு சிலர் இதை எதிர்த்து நின்றாலும் அவர்கள் இச் சமூகத்தால் துரோகிகளாக அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டுவிடிகின்றனர்.

அதன் பின்னர் சொல்லுவர் இம் மூடர் கடவுளை எதிர்த்தான்,, அதனால் அவன்      கடவுளாலேயே அழிக்கப்பட்டான் .இது  எல்லாம் மனிதன் தான் செய்த பிழையை மறைக்க, உருவாக்கி  வைத்திருக்கும் ஒரு மூட நம்பிக்கை தான் சாமி