Saturday, October 1, 2011

மேர்வின் சில்வாவும் கடவுளின் சாபமும் ஒரு கூத்தாடியின் பார்வை

 இந்த பதிவ எழுதுறதுக்கு முக்கிய காரணம் மேர்வின் சில்வாதான் ...என்னதான் மனுசனுக்கு சமூகத்தில கெட்ட பெயர் இருந்தாலும் அந்த மனுஷன் மேல எனக்கு நல்ல மரியாதை வந்தது எப்ப எண்டா நரபலிய தடுத்த போதுதான் .....

அதுக்கு பிறகு அவர் அந்த கோழியையோ /ஆட்டையோ என்ன செய்தார் எண்டு அவரிட்ட போய் கேளுங்கோ சரியா...????

ஓகே.. இந்த பதிப்பு மூலம் நான் என்ன கூத்தாட வந்து இருக்கிறன் எண்டா

கடவுள் எனற பெயரில மனுசங்க அடிக்கிற கூத்துக்கள் பற்றி தானுங்கோ..


நாம எப்ப கடவுள நினைகிறம்????



கடவுளுக்கு காய்ச்சல் வரும்போது ??????ம்ம்ம்  ஒருவேளை கடவுளுக்கு காசு இல்லாத போது????ம்ம்ம் அதெல்லாம் இல்ல 

எனக்கு எப்ப ஒரு தேவை வருகுதோ... அப்ப தான் கடவுள் நினைவுக்கு வருகிறார்

உதாரணமாக

நான் எக்ஸாம் பாஸ் பண்ணனும்......எண்ட எதிரி நாசமா போகணும் ..இல்லாட்டி அந்த பிகரு செட் ஆகணும்...... என்ற ஒரு தேவை நமக்கு வரேகுள்லையே ...????

சாமி எண்ட முருகா,, பிள்ளையாரப்பா ,,, எம் பெருமான் என்ன கை விட மாட்டார் என்று தேங்கையில இருந்து மனுஷன் வரைக்கும் கொலை பண்ணி கடவுளுக்கு காணிக்கை போடுறம்

அப்ப யார் இந்த கடவுள் எண்டு  நாம் எமக்குள் கேள்வி கணைகளை தொடுத்தோம் ஆனால் அதற்கு பதில் கிடைக்கும் ??????

இதை விட்டுட்டு

 பிழைய எல்லாம் எங்களோட வச்சு கொண்டு கடவுளிட்ட பொய் அழுதா அவர் என்னடா பண்ணுவார் ......பாவம்டா அந்த கடவுள் உங்களால அவருக்கு கெட்டபெயர்........

அன்பு தான் சிவம் என்பது எனது கொள்கை ....அதற்காக எல்லா சந்தர்ப்பத்திலையும் அன்பு மழைகளை பொழிய முடியாது அப்படி பொழிய நான் புத்தனும் அல்லன் ...எல்லா ஆசைகளும் உள்ள  ஒரு சாதாரண மனிதன்..

யோசிக்கணும் அண்ணே......



2 comments: