Saturday, March 23, 2013

இனி மெல்லச் சாகும்


தமிழ் நாட்டில் இருக்கும் மாணவர்களை  பார்கேக கவலை தான் வருகிறது ...ஈழ பிரச்சனைக்கு போரடிறது ஒரு புறம் இருக்க ....அவர்கள் தங்களுக்கு என்ற ஒரு அடையாளத்தையே இழந்து நிற்பதுதான் உண்மை... நாங்கள் யார் தமிழன் யார் என்ற அடையாளத்தை இழந்து நிற்கிறான் உலகெங்கும் இருக்கும் தமிழர்கள்..

மீனவர் பிரச்னை தொடங்கி கூடங்குளம் வரை தமிழர்கள் ஒடுக படும் போது 80% தமிழ்நாட்டில் இருபவர்கள் திரும்பி கூட பார்க்க வில்லை.
மாறாக அதற்கு எதிர்த்து குரல் கொடுத்த உதயகுமாரன், ஒரு வெளி நாடு கை கூலி என்று அவிழ்த்து விட்டது காங்கிரசும் திமுகவும் ..இவர்கள் சொல்வதே சரி என்று மக்களும் நினைக்கும் வண்ணம் sun tv - kalainyar tv பிரச்சாரம் நடத்தி வெற்றி பெற்றன..

இதே பிரச்சனை தான் மீனவர் பிரச்சனையிலும். இந்த உப்பு சப்பு இல்லாத தீர்மானத்தை நிறை வேற்றும போது காங்கிரசோடு திமுக இருந்தால் தமிழக மக்களிடம்  ஆப்பு நிசம் என்று பிரிந்த மாறி நடிக்கிறார் கருணாநிதி..மீண்டும் இவர் தேர்தலில் வெற்றி பெற்றால் காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் .

தங்களுடைய போராட்டம் அகிம்சை வழியில் நடத்த பட்டது பற்றி பெருமிதம் கொள்ளும் மாணவர்கள் அவர்களுடைய போராட்டத்தை மத்திய அரசு ஒரு துளியும் கணக்கு எடுக்க வில்லை என்பது தான் உண்மை...

இந்த விரக்தியில் தான் பலர் தீக்குளித்து சாகிறார்கள். மன விரக்தி என்றே கூற வேண்டும்...இதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் மேலே தமிழன் என்றால் இப்படிதான் என்று மற்ற இனத்தவர்கள் போடு வைத்து இருக்கும்  போலி Definition தான் ..வந்தாரை வாழ வைப்பான் தமிழன்..

ஆனால் இப அவனாலேயே வாழ முடியாம இருக்கிறப்போ..தமிழா நீ விழித்தெழு என்று குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் மீது இன்னொரு தமிழனே புகார் கூறி அவனை நோகடிப்பது மட்டுமன்றி அவன் ஒரு தீவிரவாதி என்றும் அடையாள படுத்தப்படும் நிலைதான் நிலவுகிறது.. உதாரணம் உதயகுமாரன் ....

பாதிக்க பட்டவனுக்கு தான் அந்த வலி தெரியும் அதை ஒருத்தரும் மதிகிறதே இல்லை.. மாறாக தம்மை சமூகத்தில் நலவராக காட்டி கொள்ள எடுக்கும் போலி நாடகங்கள் இன்னும் கடுப்பை தன கிளப்புது...

இதற்கு முக்கிய காரணம் சமூகத்தில் இருக்கும் 90% மக்கள் சிந்திப்பதே
 இல்லை தனது அப்பன் தாதன் மூதாதையர் என்ன சொன்னன்களோ அதுவே சரி என்று நினைத்து வாழ்கின்றான்.

படிக்கணும் காசு உழைக்கணும் கல்யாணம் பண்ணும் தனுடைய பிள்ளய மத்தவங்க பிள்ளைய விட திறமை சாலினு சாமூகதில பெயர் எடுக்கணும் யார்ட இந்த மானம் கெட்ட சமூகம் ????

நிறைய பேர் நினைப்பு Degree, Cima, Cim, Acca, Cfa, MBA படிச்சு முடிசுடம் நாங்க பெரிய அறிவாளிகள் தான் சமூகத்தில் இனி சோறு கிடைக்கும் நமது பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்...இன்னொரு மனிதன் கொடூரமாக கொல்லப்படும் போது ஒரு இரங்கல் கூட படாத நீ மனித இனத்திற்கே ஒரு அவமானம்....இப்படி நான் சொன்ன நான் பைத்தியக்காரன்...

பச்சோந்தி கூட சூழலுக்கு ஏற்ப தனை மாற்றுது அனா மனிதன் தன்னை மாற்றி கொள்ள தயார் இல்லை..இதற்கு அரசியல் கட்சி மீதும் நடிகர் மீதும் அல்லது நித்தியானந்தா போன்ற போலி சாமியார்கள் மீதும் பழி போடுவது ஏற்புடையது அல்ல..உங்களுடைய அறிவு எங்கே நிற்கிறது என்று நீங்களே உங்களை கேள்வி  கேட்டு  கொள்ளுங்கள் ...

மிகவும் மன விரக்தியை தரும் விடயம் மனிதன் தன அடையாளத்தை இழந்து நிற்பது தான்..அன்பு தான் கடவுள் இது ஒருத்தருக்கும் புரியாது..மதத்தினாலும் சாதியாலும் பிரிந்து இருக்கும் இந்த மனித குலம் ஒரு பாரிய அழிவை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறது..என்று மனிதன் மதங்களை நிற வேற்றுமைகளை துறந்து  வெளியே வருகிறானோ அன்று தான் மனித குலம் விடியும்..இது தவிர ஒவோருதணும் தனது அறிவை அதாவது புத்தக பூச்சிகளாக இருக்காமல் பகுத்தறிவை வளர்ப்பது தான் அவசியம்.

இந்த பதிவை படிக்க போறது 10 பேர் சிந்திக்க போவது ஒருத்தனும் இல்லை..ஏன் ஏன்டா இப விஜய் டிவி ல அது இது எது தொடங்க போகுது பொய் பார்க்கணும் இவன் சும்ம மொக்க போட்டு இருக்கான்...வெங்காயம் :(.